பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
OMG..50 துண்டுகளாக மனைவியை வெட்டி கொலை செய்த கொடூர கணவன்.. காட்டிக்கொடுத்த தெரு நாய்கள்..!
ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் தில்தார் அன்சாரி. இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவி உயிரோடு இருக்கும் நிலையில் இவர் அதே பகுதியில் வசித்து வரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரூபிகா பஹாட்டின் என்பவரை காதலித்து சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் தில்தார் அன்சாரி தனது தாய் மாமனுடன் சேர்ந்து ரூபிகா பஹாட்டினை கொலை செய்துள்ளார். மேலும் ரூபிகாவின் உடலை 50 துண்டுகளாக வெட்டி கவரில் போட்டு போரியோ சந்தாலி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் பின்பக்கத்தில் வீசி உள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள நாய்கள் ரூபிகாவின் உடலை இழுத்துக் கொண்டு சென்று தெருவில் போட்டு கடித்துக் கொதறி உள்ளன.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதி முழுவதும் மீதமுள்ள உடல் பாகங்களை மோப்பநாய் உதவியுடன் தேடி உள்ளனர். மேலும் இதனைத் தொடர்ந்து தில்தார் அன்சாரியை விசாரணை செய்த போலீசார் ரூபிகாவை கொலை செய்தது தில்தார் அன்சாரி தான் என்று உறுதி செய்துள்ளனர். மேலும் ரூபிகாவின் கணவர் தில்தார் அன்சாரியை கைது செய்த போலீசார் கொலைகான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.