மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எஸ்கேப் பிளான் தோல்வி., குண்டடிபட்டு கைதி.! மனிதாபிமானத்துடன் உதவிய காவலர்கள்..! காலையில் பரபரப்பு சம்பவம்.!
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி, காவல் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து தப்பி செல்ல முயற்சித்தால், பதில் தாக்குதல் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் உள்ள புறநகர் பகுதியில் என்.ஐ.ஏ காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலைய அதிகாரிகள் குற்றவாளி ஒருவனை கைது செய்திருந்த நிலையில், அவனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மெட்ரோ விஹார் காவல் நிலையம் அருகே விசாரணை நடந்தபோது, குற்றவாளி திடீரென காவல் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார். மேலும், துப்பாக்கி சூடும் நடத்தி இருக்கிறார்.
சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் துப்பாக்கியை கீழே போட்டு கைதாக எச்சரித்துள்ளனர். ஆனால், குற்றவாளி தப்பி செல்ல முயற்சிக்கவே, அவனது கால்களை குறிபார்த்து சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
காயத்துடன் கதறிய குற்றவாளியை கைது செய்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பாதுகாப்பு கருதி கால்களில் துப்பாக்கியால் சுடப்பட்டதாக காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.