96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
யாருடைய நலனுக்காக பெட்ரோல், டீசல் விலை உயர்வு? மத்திய அரசை விமர்சிக்கும் ப.சிதம்பரம்!
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து வந்தன. நாட்டில் கொரோனா தாக்கத்தால் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் 16ந்தேதிக்கு பிறகு எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் இருந்து வந்தது.
கொரோனா சமயத்தில் கச்சா எண்ணெய் விலையும் பெருமளவில் வீழ்ச்சி அடைந்தது. ஆனாலும் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இந்த நிலையில், 82 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடந்த 7ந்தேதி அதிரடியாக உயர்த்தப்பட்டது.
பெட்ரோல் மீதுள்ள வரியை உயர்த்துகிறார்கள். ஏனென்றால் மத்திய அரசு ஏழை. அதற்கு வரிப் பணம் வேண்டும்.
— P. Chidambaram (@PChidambaram_IN) June 8, 2020
இந்நிலையில் மத்திய அரசை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதில், "பெட்ரோல் மீதுள்ள வரியை உயர்த்துகிறார்கள். ஏனென்றால் மத்திய அரசு ஏழை. அதற்கு வரிப் பணம் வேண்டும்", "இன்று பெட்ரோல் சில்லறை விலையை உயர்த்தினார்கள். ஏனென்றால் எண்ணை நிறுவனங்கள் ஏழைகள். அவர்களுக்குப் பணம் வேண்டும்" என தெரிவித்துள்ளார்.