தவெக விஜயின் முதல் மாநாடு; பழ. கருப்பையா சொல்வது என்ன? விபரம் உள்ளே.!



Pala. Karuppiah about TVK Vijay Resolution Campaign 

 

மூத்த அரசியல் தலைவரான பழ. கருப்பையா, விஜய் குறித்து பேசுகையில், "அவர் எந்த கருத்தை போதித்தார் என்பது தெரியவில்லை. முதலில் அவர் வலுவாக ஊன்றிக்கொள்ளவேண்டும் என அவசியம் இல்லை. அவர் மாநாடு இன்னும் நடக்கவில்லை, அவர் மனதில் இருப்பது தெரியாது. இந்த சமயத்தில் அவரை விமர்சிப்பது தேவையில்லை. 

வந்ததும் கருத்து கூறலாம்

தமிழுக்கும், தமிழினத்திற்கும் உரிய வகையில் வெளிப்பாடு நடத்தினால் பாராட்டுதல். பழைய கட்சிகள் நிறைய இருந்தாலும், அவர்களுக்கான கரை இருந்தாலும், அவை இல்லாமல் புதிய கட்சி வருகிறது என்றால், அதனை கவனித்து அவர் வந்தபின்னர் கருத்துக்கள் கூறலாம். அவர்கள் வந்து கரை பிடிக்கலாம், வரும்போது கரை பிடிக்காது. 

இதையும் படிங்க: சென்னை வான் சாகச நிகழ்ச்சியில் த.வெ.க உறுப்பினரும் பலி..!

தெளிவு வேண்டும்

முந்தைய பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல், சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்துக்கள் கூறியது அவரின் நிலையற்ற தன்மை உணர்த்துகிறது. அவருக்கான தெளிவு என்பது வேண்டும். பெரியாரின் சமாதிக்கு போனால் பகுத்தறிவை ஏற்றுக்கொள்வதாக கூறுவார்கள். அங்கு பிராமணர்கள், சங்கராச்சாரியார் போகமாட்டார்கள். ஆளுநர் அங்கு செல்ல மாட்டார். ஏனெனில் அவர்களின் சித்தாந்தம் வேறு" என கூறினார்.

தவெகவின் மூத்த பேச்சாளராக பழ கருப்பையா அறிவிக்கப்படலாம் என அரசல்-புரசலாக பேசப்படுகிறது. ஆனால், அதற்கு கருப்பையா மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: #Breaking: "செயல்மொழியே நமது அரசியல்" - தவெக விஜய் அதிரடி அறிக்கை.!