திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெற்றோர்களே கவனம் தேவை... ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டு குழந்தை மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சாதாரா மாவட்டத்தில் சுதிர் ஜாதவ் என்பவரது 1 வயது பெண் குழந்தை ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டு தொண்டையில் சிக்கி மூச்சு திணறி மயக்கம் அடைந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் தந்தை சுதிர் ஜாதவ் குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர்.
மேலும் ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கியதால் தான் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.