பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நவம்பர் 14.... இன்றைக்கு என்ன நாள் தெரியுமா? வரலாறு முக்கியம் மக்களே..!
இந்தியாவில் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமரும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேரு அவர்கள் 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று பிறந்தார். இவரது பிறந்த தினத்தை இந்திய அரசு குழந்தைகள் தினமாக அங்கீகரித்துள்ளது.
நேரு குழந்தைகள் மீதும் மிகவும் அன்பு கொண்டிருந்ததால் குழந்தைகள் அவரை அன்போடு நேரு மாமா என்று அழைத்தனர். இன்றைய குழந்தைகள் நாளை இந்தியாவை உருவாக்குவார்கள். அவர்களை நாம் கவனித்துக் கொள்ளும் விதம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று நேரு கூறியிருக்கிறார்.
இந்திய தேசமானது சுதந்திரம் அடைந்த நேரத்தில் பாரத பிரதமர் நேரு அவர்கள் தனது கனவு இந்தியா குழந்தைகளின் கையிலே தங்கி இருக்கிறது என்பதை நன்கு அறிந்தவராய் குழந்தைகளோடு நேரம் செலவிடுவதில் அதிக நாட்டம் காட்டி வந்துள்ளார்.
இன்றைய தினம் நேருவின் பிறந்தநாள் என்பது மட்டுமல்லாமல் குழந்தைகளின் உரிமை, நலனை அடிப்படையாகக் கொள்ளும் நோக்கில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த நாளின் முக்கிய நோக்கமாக குழந்தைகளுக்கு அவர்களின் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்நாள் சிறப்பிக்கப்படுகிறது.
எனவே தான் இந்த நவம்பர் 14 குழந்தைகள் தினமாக நாடெங்கும் விழாக்கோலமாக குழந்தைகள் கல்வி நிலையங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் "ஒரு தேசத்தின் சொத்து களஞ்சியங்களில் இல்லை அவை பள்ளிக்கூடங்களில் தான் உள்ளது". எனவே குழந்தைகளை பேணி பாதுகாத்து அவர்களைக் கொண்டாடுவோம்.