மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுதியில் தங்கி இருந்த 10 வகுப்பு மாணவி 3 மாத கர்ப்பம்... அம்பலமான வார்டனின் பதறவைக்கும் செயல்., நடந்த துயரம்..!
விடுதியில் தங்கி படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை விடுதி வார்டன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் கொண்டயம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கொத்த பள்ளியை சேர்ந்த விஜயகுமார் (60) என்பவர் வார்டனாக வேலை செய்து வருகிறார்.
இவர் அந்த விடுதியில் தங்கி படித்துவந்த பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் அந்த மாணவி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்
அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது பெற்றோர் அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு மருத்துவப் பரிசோதனையில் அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரிடம் விசாரித்த பொழுது விடுதி வார்டன் விஜயகுமார் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காக்கிநாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விஜயகுமாரை தேடி வருகின்றனர்.