"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
வீட்டின் பின்புறம் இருந்த பாழங்கிணற்றில் விழுந்து 5 வயது சிறுவன் பரிதாப பலி.. பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரியாங்குப்பம் ஓடைவெளி, சின்ன வீராம்பட்டினம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் என்ற தவமணி (வயது 43). இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி மாலா. தம்பதிகள் இருவருக்கும் குருமூர்த்தி என்ற 5 வயது மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
நேற்று மதிய நேரத்தில் குருமூர்த்தி வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், நீண்ட நேரமாக அவனை காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்த நிலையில், சிறுவன் தரைக்கிணற்றில் தவறி விழுந்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அரியாங்குப்பம் காவல் துறையினர் மற்றும் புதுச்சேரி மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பாழடைந்த தரைக்கிணற்றில் சிறுவனை தேடியுள்ளனர். இந்த தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு சூழல் ஏற்பட, ஒருமணிநேர தேடலுக்கு பின்னர் சிறுவன் குருமூர்த்தி பிணமாக மீட்கப்பட்டான். மகனின் உடலை கண்டு பெற்றோர்கள் கதறி அழுதது பேரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிறுவனின் உடலை மீட்டதும், அரியாங்குப்பம் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.