மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலைகளில் விழும் நிலக்கரியால் நடக்கும் விபத்து; காவு வாங்க துடிக்கிறதா காரைக்கால் சாலை?..!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில், விதிகளை மீறி நிலக்கரியை அதிகளவு ஏற்றிச்செல்லும் லாரிகள் ஏராளம். அவை தார் போர்வை போர்த்தப்பட்டு எடுத்து சொல்லப்பட்டாலும், சாலை வளைவுகள் மற்றும் வேகத்தடை உள்ள இடங்களில் நிலக்கரிகள் சிலநேரம் வெளியே கொட்டிச்செல்லும்.
இவை அடுத்தடுத்த வாகனங்கள் வந்து செல்லும்போது தார் சாலையுடன் சேர்ந்து ஒட்டியபடி இருப்பதால், ஒருகட்டத்தில் அவை பிற வாகனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றன. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சாலையில் பல இருசக்கர வாகன ஓட்டிகள் வீழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட குறிப்பிட்ட பகுதியில் அடுத்தடுத்து என ஒரேநாளில் 10 க்கும் மேற்பட்டோர் விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்தனர். இதுகுறித்த சம்பவத்திற்கு நிலக்கரிகள் சாலையில் சிதறிக்கிடப்பதே காரணம் என உள்ளூர் மக்கள் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். தற்போது அதன் காணொளிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
விபத்தை தவிர்க்க புதுச்சேரி மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு என்.ஆர் காங்கிரஸ் + பாஜக கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில முதல்வராக ரங்கசாமி பணியாற்றி வருகிறார்.
#WATCH | காரைக்கால்: ஒரே நாளில், ஒரே இடத்தில் அடுத்தடுத்து சறுக்கி விழுந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் - சாலையில் சிதறிக்கிடக்கும் நிலக்கரியால் விபத்து ஏற்படுவதாக குற்றச்சாட்டு!#SunNews | #Karaikal | #CCTV pic.twitter.com/aYDIFHd60g
— Sun News (@sunnewstamil) April 26, 2024