மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் பிள்ளையைவிட நீ நன்றாக படிப்பியா? - தாயின் பதறவைக்கும் செயலால் பறிபோன உயிர்.! நாடே அதிர்ச்சி., பெற்றோர் கண்ணீர் கதறல்..!
தனது மகளை விட மற்றொரு மாணவர் நன்றாக படிக்கிறார் என்ற ஆத்திரத்தில் தாய் சிறுவனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால், நேரு நகரில் வசித்து வருபவர் இராஜேந்திரன். இவரின் மனைவி மாலதி. தம்பதிகளுக்கு ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இராஜேந்திரன் காரைக்காலில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரின் இரண்டாவது மகன் பாலமணிகண்டன்.
சிறுவன் பாலமணிகண்டன் நேரு நகரில் செயல்படும் தனியார் ஆங்கிலப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் படிப்பு முதல் விளையாட்டு வரை என அனைத்திலும் ஆர்வமுள்ள துடிப்பான சிறுவனாக இருந்து வந்துள்ளார். பள்ளியில் நடைபெறவிருந்த ஆண்டுவிழா நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினத்தில் ஒத்திகை முடித்து வீட்டிற்கு திரும்பிய பாலமணிகண்டன், தனது தாயாரிடம் பள்ளிக்கு எதற்காக தனக்கு குளிர்பானம் கொடுத்துவிட்டீர்கள்? என்று கேட்டுள்ளார். தாயிடம் மகன் பேசிக்கொண்டு இருக்கும்போதே திடீரென வாந்தி எடுத்து மயங்கவே, பதறிப்போன பாலமணிகண்டனை தாய் மாலதி காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார்.
பின்னர், பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவே, சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்கையில் பாலமணிகண்டனுடன் பயின்று வரும் மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா என்பவர் வாட்ச்மேன் தேவதாஸிடம் குளிர்பானத்தை கொடுத்து, பாலமணிகண்டனின் உறவினர் சிறுவனிடம் கொடுக்க கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இராஜேந்திரன் தெரிவிக்கையில், பள்ளியில் பாலமணிகண்டனிற்கும் - மாணவிக்கும் இடையே வகுப்பில் யார் சிறந்த மாணவர்? என்ற போட்டி இருந்து வந்துள்ளது. இதனால் பாலமணிகண்டன் மீது மாணவியின் தாயாருக்கு ஆத்திரம் ஏற்படவே, அவர் சிறுவனுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்படியாக சம்பவத்தன்று குளிர்பானத்தில் விஷம் கலந்து குடிக்க கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை அறிந்து அதிர்ந்துபோன இராஜேந்திரன் காரைக்கால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சகாயராணி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பாலமணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தான். தனது பிள்ளையை விட மற்றொரு பிள்ளை படிப்பிலும், விளையாட்டிலும் சுட்டியாக இருக்கிறது என பெண்மணி செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.