மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்ணை மசாஜ் சென்டருக்கு அழைத்த ஏட்டு.. வழக்கை வாபஸ் பெற கூறி, அல்லக்கைகளை வைத்து கொலை மிரட்டல்.!
காவல் அதிகாரியின் மீதான வழக்கை வாபஸ் பெறக்கூறி பெண்ணின் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள லாஸ்பேட்டை பகுதியை சார்ந்த 30 வயது பெண்மணி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கணவர் குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அதன்போது, பணியில் இருந்த தலைமை காவலர் சண்முகம், பெண்ணை மசாஜ் சென்டருக்கு வரும்படி கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், துறைரீதியான விசாரணை நடத்தி தலைமை காவலர் சண்முகத்தை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தலைமை காவலர் சண்முகம் மீதான வழக்கை வாபஸ் பெறக்கூறி, பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. சண்முகத்திற்கு ஆதரவான கணேசன் உட்பட சிலர், பெண்ணின் தாயார் பணியாற்றும் உணவகத்துக்கு சென்று வழக்கை வாபஸ் பெறக்கூறி மிரட்டி இருக்கின்றனர்.
மேலும், வழக்கை வாபஸ் பெறாத பட்சத்தில், கொலை செய்திடுவோம் எனவும் மிரட்டி இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் கணேசன் உட்பட 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.