தங்குவதற்கு இடமில்லாமல் குழந்தைகளுடன் பொது கழிவறையில் வசித்துவந்த பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்!.



poor girl got lucky

கர்நாடக மாநிலத்தின் மாண்டியாவை சேர்ந்த நிர்மலா என்ற பெண்ணின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்த நிலையில் தனது இரண்டு மகள்களுடன் வசிப்பதற்கு இருப்பிடம் இல்லாத நிலையில் பொது கழிப்பறையில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.

சிறு சிறு வேலைகள் செய்து அதில் வரும் வருமானம் மூலம் வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார் நிர்மலா. நிர்மலாவுக்கு அரசாங்கம் சிறிய அளவில் நிலத்தை ஒதுக்கிய போதும் பண வசதி இல்லாததால் அவரால் வீடு கட்டி கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் நிர்மலாவின் நிலை குறித்து அறிந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரை பேட்டி எடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பின. இதையடுத்து அரசு அதிகாரிகள் நிர்மலாவுக்கு உதவ முன்வந்தனர். 

poor womenஇதனையடுத்து நிர்மலா வாடகை வீட்டில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார். இதற்கான மூன்று மாத வாடகை முன்கூட்டியே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று மாதங்களில் பசாவா யோஜனா என்ற அரசாங்க திட்டத்தின் கீழ் நிர்மலாவுக்கு சொந்த வீடு கட்டி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.