உங்க வங்கிக்கணக்கில் ரூ.456 பிடித்தம் செய்யப்பட்டதா?.. காரணம் இதுதான்.!



prime-minister-insurance-scheme-money-deducted

 

வங்கிகள் அவ்வப்போது அவர்களின் திட்டம் சார்ந்த விஷயங்களுக்கு நமது பணத்தை பிடித்தம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஏடிஎம் கார்டு மற்றும் நமக்கு வழங்கும் எஸ்எம்எஸ் போன்றவைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட கட்டணத்தை வசூல் செய்வார்கள். 

தனியார் வங்கிகள் அவர்களின் விதிமுறை, கட்டணம் மாறுபாடுகளுடன் அதனை வசூல் செய்து விடுவார்கள். இந்த நிலையில் தற்போது வங்கி கணக்கிலிருந்து ரூ.436 மற்றும் ரூ.20 என மொத்தமாக ரூ.456 பணம் கழிக்கப்பட்டதாக பலரும் தகவல் தெரிவித்துள்ளனர்.

PMO

இது பிரதமரின் விபத்து காப்பீடு திட்டம் & ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் பணம் பிடிக்கப்பட்டதாக வங்கிகள் தகவல் தெரிவித்துள்ளன. பிரதமரின் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். 

உரிமைதாரர் விபத்து காரணமாக உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.2 இலட்சம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரதமரின் விபத்து காப்பீடு திட்டத்தை தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.