பிரதமர் மோடி ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள... அடுத்த வாரம் இந்தோனேசியா பயணம்..!



Prime Minister Modi will visit Indonesia next week to attend the G-20 conference..!

பிரதமர் நரேந்திர மோடி ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 14-16 தேதிகளில் இந்தோனேசியாவின் பாலிக்கு செல்கிறார். 

இந்தியா ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது. வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அடுத்த வருடம் நவம்பர் 30-ஆம் தேதிவரை இந்தியா இந்த பொறுப்பை வகிக்கும். ஜி 20 மாநாடு நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில், இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா அதிபரின் அழைப்பின் பேரில், 17வது ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 14-16 தேதிகளில் இந்தோனேசியாவின் பாலி நகருக்கு செல்கிறார். அங்கு அவர் பல தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார்.

அதுமட்டுமின்றி இந்தியா ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளதை குறிக்கும் வகையில், இந்தோனேசியா அதிபர் ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை பிரதமர் மோடியிடம் வழங்குவார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.