திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெளிநாட்டில் திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி செய்யும் இந்தியர்கள்: கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மன் கி பாத் (மனதின் குரல்) உரையை, அகில இந்திய அளவில் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார்.
இந்த மாதம் 107 வது மனதின் குரல் நிகழ்ச்சியானது நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்திய மக்களில் சிலர் தங்களின் திருமணம் போன்ற நிகழ்வுகளை வெளிநாட்டில் நடத்துகிறார்கள்.
இப்படியான திருமணங்கள் தேவையா? என யோசிக்க வேண்டும். நமது நாட்டில் திருமணம் நடத்தப்பட்டால், இந்தியாவின் பணம் என்பது எங்கேயும் செல்லாமல், இந்தியாவிற்குள்ளேயே இருக்கும்.
அப்பணம் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த உதவி செய்யும். இதனால் வெளிநாடுகளுக்கு செல்லாமல், இந்தியாவுக்குள்ளேயே இந்தியர்கள் திருமண நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
திருமணத்திற்கு பொருட்கள் வாங்குவோரும், இந்திய தயாரிப்புகளுக்கு தங்களின் முக்கியத்துவத்தை வழங்க வேண்டும்" என கூறினார்.