மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விராட்-அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த திரைப்பிரபலங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவின் புகைப்படங்கள் பல திரை நட்சத்திரங்களையும் வாய்பிளக்க வைத்துள்ளது.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அப்போது முதலே இந்தியாவில் கடைபிடிக்கப்படும் பல்வேறு சடங்குகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கர்வா சவுத் சடங்கில் இருவரும் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர். இந்த விழாவானது திருமணமான பெண்கள் தங்களது கணவரின் உடல் நலனிற்காக விரதம் இருப்பர். ஆனால் விராட் கோலி தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து தானும் விரதம் மேற்கொண்டார்.
அந்த விழாவின் இறுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்களை கண்டு வியந்த அவர்களின் நெருங்கிய நண்பர்களான பிரியங்கா சோப்ரா மற்றும் சமந்தா "புகைப்படம் மிகவும் அழகாக இருக்கிறது; நீங்கள் இருவரும் மிகவும் அழகான ஜோடி" என பதிவிட்டுள்ளனர்.