தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பிரியங்கா சோப்ரா! எதில் தெரியுமா?
உலக அளவில் இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் பெறுபவர்கள் பட்டியலில் இந்திய அளவில் ப்ரியங்கா சோப்ரா முதலிடத்திலும் விராட் கோலி இரண்டாமிடத்திலும் உள்ளனர்.
2019 இன்ஸ்டாகிராமில் அதிக பணம் பெறுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள் ப்ரியங்கா சோப்ரா மற்றும் விராட் கோலி மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
பல திரபிரபலங்கள், விளையாட்டு பிரபலங்களை கொண்ட இந்த பட்டியலில் உலக அளவில் ப்ரியங்கா சோப்ரா 19 ஆவது இடத்திலும் விராட் கோலி 23 ஆவது இடத்திலும் உள்ளனர். ப்ரியங்கா ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டிற்கு 271,000 டாலரும் விராட் கோலி 196,000 டாலரும் வருமானமாக பெறுகின்றனர்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் பிரபல ரியாலிட்டி டிவி ஷோவில் தோன்றும் கயிலே ஜென்னர் முதல் இடத்தில் உள்ளார். இவர் ஒரு போஸ்டிற்கு 1,266,000 டாலர் வருமானம் பெறுகிறார்.