மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா... பேத்தி பிறந்த உற்சாகத்தில் ஹெலிகாப்டரில் வரவேற்பு.. விவசாயி கொண்டாட்டம்.!
பேத்தி பிறந்த உற்சாகத்தில், தாத்தா ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து வியப்படைய செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, புறநகரில் உள்ள பலேவாடி பகுதியில் வசித்து வருபவர் அஜித் பாண்டுரங் பல்வத்கர். இவர் ஒரு விவசாயி. இந்த நிலையில், இவரது மகனுக்கு சமீபத்தில் க்ருஷிகா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அஜித் பாண்டுரங் பேத்தி பிறந்ததை உற்சாகமாக கொண்டாட நினைத்துள்ளார்.
அத்துடன் குழந்தையை பிறந்தவுடன் ஷெவால் வாடியில் உள்ள தாய் வழி தாத்தா,பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில், தற்போது மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்த அஜித் மகிழ்ச்சியில், அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் ஒன்றை செய்துள்ளார்.
குழந்தை க்ருஷிகாவுக்கு பிரம்மாண்டமான வரவேற்பினை அளிப்பதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து, தனது பேத்தியையும், மருமகளையும் ஹெலிகாப்டரில் அழைத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து பேத்திக்காக அஜித் பாண்டியன் எடுத்திருந்த இந்த பிரம்மாண்டமான முடிவு அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.