பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
புஷ்பா: ஹிந்தி ஸ்ரீவள்ளி பாடலில் சர்ச்சை.. 16 வயது சிறுமிகள் தினுசா இருப்பார்களாம்..! குவியும் கண்டனம்.!!

தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படம் ஆந்திராவில் செம்மரம் கடத்தும் கும்பலினின் பின்னனியில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இப்படத்தின் ஊ சொல்றியா மாமா, சாமி போன்ற பாடல்கள் நல்ல பல்வேறு வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் உள்ள ஸ்ரீவள்ளி என்னும் பாடலில் தமிழ் மொழியில், பாடலின் இறுதியில் "18 வயதை தொட்டாலே போதும், நீயில்லை எல்லா பொண்ணும் தினுசாத்தான் தெரியும்" என உள்ளது. இதனைப்போல தெலுங்கு மொழியிலும் 18 வயதை கடந்ததும் பெண்கள் அழகாக இருப்பார்கள் என பாடப்பட்டுள்ளது. ஆனால், இந்தி மொழியில் இதே பாடல் வரியில் 16 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பாடல் வரிகளை எழுதி கொடுத்த ரஹ்யூப் அலாமிடம் நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆணையம் வரை சென்றுள்ளது. இதனால் விரைவில் பாடல் வரி மாற்றப்படலாம் அல்லது பாடல் வரியை எழுதி கொடுத்த ரஹ்யூப் மீது சட்ட ரீதியான வழக்கை தொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று சிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த பாடலில் சிறுமிகள் அழகாக இருப்பார்கள் என சர்ச்சையாக எழுதப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஹிந்தி சென்சார் போடும் இதனை எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளன.
Noted!! https://t.co/kFv87CDniX
— प्रियंक कानूनगो Priyank Kanoongo (@KanoongoPriyank) January 24, 2022