ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
ரூ.1 ஒரு தேங்காய் போதும்.. வரதட்சணையை மறுத்த மருமகன்.. நெகிழ்ச்சி செயல்.!

வரதட்சணை இந்தியாவில் மிகப்பெரிய சமூக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பெண்களுக்கு எதிராக மாமியார், மைத்துனி என பெண் உட்பட கணவர் குடும்பத்தினரால் நிகழ்ந்த படுகொலைகள், தற்கொலைகள் ஏராளம். வரதட்சணைக்கு முற்றுப்புள்ளிவைக்க இன்றளவில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனிடையே, திருமணத்தில் மணமகனுக்கு பெண் வீட்டார் சார்பில் வரட்சனையாக ரூ.5 இலட்சம் 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை மணமகன் வேண்டாம் என கூறிவிட்டு, மணவீட்டாரின் மனதிருப்திக்காக ரூ.1 மற்றும் ஒரு தேங்காயை மட்டும் எடுத்துக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி அறையில் நடந்த பலான வேலை.. தலைமை ஆசிரியர் - பெண் ஆசிரியை நெருக்கம்.. அதிர்ச்சி காட்சிகள் லீக்.!
வரதட்சணை மறுப்பு
ராஜஸ்தானில் வசித்து வரும் பரம்வீர் (வயது 33) என்பவர், நிகிதா பாடி (வயது 28) என்ற இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ள, இருவரின் திருமணம் காதலர் தினமான பிப்.14 அன்று நடைபெற்றது. மணமகள் வீட்டார் சார்பில் வரதட்சணையாக ரூ.5,51,000 பணம் கொடுக்கப்பட்ட நிலையில், அதனை மணமகன் ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும், உங்களின் மனம் புண்படக்கூடாது என கூறி ரூ.1, ஒரு தேங்காய் எடுத்து, பிற பணத்தை அவர்களிடமே கொடுத்தார். இதனால் நெகிழ்ச்சியடைந்த மணமகன் வீட்டார், மணமகனின் குணத்தை எண்ணி நெகிழ்ந்துபோயினர்.
இதையும் படிங்க: நான் அனாதைங்க.. பெண்களின் இரக்க மனதை இரக்கமேயில்லாமல் ஏமாற்றிய கொடுமை.. 4 திருமணம் செய்தது அம்பலம்.!