5 மாநில தேர்தல் முடிவு எதிரொலி - முதல்முறையாக பாஜகவிற்கு எதிராக பேசிய ரஜினி!



rajini-about-bjp-after-5-states-election

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 111 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 110 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ.க. வேட்பாளர் 4 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 74 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 100 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 6 தொகுதிகளிலும், இதர காட்சிகள் 19 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.   

rajinikanth

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில்  பா.ஜ.க. வேட்பாளர்கள் 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 66 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் 7 தொகுதிகளிலும், இதர வேட்பாளர்கள் 1 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

மேலும் மிசோரம் மற்றும் தெலுங்கானாவில் மாநில காட்சிகள் முன்னிலைபெற்று ஆட்சியமைக்க உள்ளன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாஜகவிற்கு ஆதரவாக பேசிய ரஜினி இன்று பாஜக செல்வாக்கை இழந்துள்ளதாக கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பாஜக ஆட்சி பற்றி புகழ்ந்து பேசிய ரஜினி, "மோடி நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காகக் கடினமாக முயற்சி செய்யும் அவர் தனது சிறப்பைக் கொடுக்கிறார்" எனக் கூறினார். 

rajinikanth

ஆனால் இன்று வெளியாகியுள்ள 5  மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து ரஜினி இன்று கூறியுள்ள கருத்தில் "பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது"  என்றார். 

இதன் மூலம், மோடியின் பாஜக கட்சி பலம் வாய்ந்தது என்ற கூறிய ரஜினிகாந்த், அது செல்வாக்கை இழந்துவிட்டது என்று தற்போது கூறியுள்ளார். இதன் மூலம், ரஜினிகாந்த் பாஜக கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்று கூறிய பலருக்கு இந்த கருத்து அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ரஜினியின் அடுத்த அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.