ஆந்திர மாநில அரசியலில் சந்திரபாபுவுடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்?.. நேருக்கு நேர் திடீர் சந்திப்பு..!



Rajinikanth meets chanthrababu

 

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த பல ஆண்டுகளாக தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இறுதியாக கொரோனா பரவலின் போது அரசியல் முயற்சியை முற்றிலும் கைவிடுகிறேன் என அறிவித்தார். 

தற்போது, அவர் இயக்குனர் நெல்சனுடன் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக இருந்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழு ஹைதராபாத்தில் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்தும் ஹைதராபாத் சென்றார். 

இந்த நிலையில், இன்று ஆந்திர பிரதேசம் அரசியலில் செல்வாக்குடன் இருந்தவரும், முன்னாள் அம்மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலரும் அறிந்த ஒன்றே. 

சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து மகிழ்ச்சிகொண்ட ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், "நீண்ட காலத்திற்கு பின்னர் எனது நண்பர் சந்திரபாபு நாயுடு கருவை சந்திப்பதில் மகிழ்ச்சி. நான் அவரது உடல்நலம் சிறந்து விளங்கவும், அரசியலில் அவரின் பாதை வெற்றியை ஏற்படுத்தவும் வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார். 

இருவரின் சந்திப்பு நட்பு ரீதியானது என்றாலும், அரசியலில் தனது மறைமுக ஆதரவை ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கி இருக்கலாம் என்றும் அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.