#Breaking: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? - ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



rbi-governor-shaktikanta-das-announcement-on-7-june-202

 

ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த் தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கூட்டத்தில் வட்டி விகிதம் என்பது உயர்த்தப்படவில்லை. இதனால் ரெபோ வட்டி விகிதம் 6.50% என்ற நிலையில் தொடரும்.

இதையும் படிங்க: இளம் வயதினரை குறிவைக்கும் புற்றுநோய்; வெளியான அதிர்ச்சி தகவல்.!! 

பணவீக்கத்தை கட்டுப்படுத்த எதுவாக ரெபோ வட்டி விகிதம் என்பது மாற்றம் செய்யப்படவில்லை. குறுகிய கால கடன்களில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதன் வாயிலாக நிலையான வைப்பு வசதி (SDF) விகிதம் 6.25% என்ற நிலையிலும், விளிம்பு நிலை வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% எனவும் தொடரும்" என கூறினார்.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதால், வங்கிகளில் கடன் வழங்கும் விகிதத்திலும் மாற்றங்கள் என்பது இருக்காது.

இதையும் படிங்க: பாஜக வேட்பாளரை ஓடஓட விரட்டி கல்வீசி தாக்குதல்; மண்டை உடைப்பு., தலைதெறித்து ஓடிய அதிகாரிகள்.!!