பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கார் வாங்க போறிங்களா.? மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது பிரபல கார் நிறுவனம்.!
உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்ட உள்ளது. பெண்களின் பெருமை படுத்தும் விதமாகவும், அவர்களை கொண்டாடும் விதமாகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் வருடம் முழுவதும் நடந்துவருகிறது.
மேலும், மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தத் வகையில், பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் தங்கள் நிறுவனத்தில் கார் வாங்கினால் பல்வேறு சலுகைகள் வழங்குவதாக முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 2 தொடங்கி மார்ச் 8 வரை இந்த சலுகை வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், ஏற்கனவே ரெனால்ட் கார் வைத்திருக்கும் பெண் வாடிக்கையாளர்களுக்கு இலவச கார் பரிசோதனையும், 10 சதவீதம் வரை கூலி தள்ளுபடி என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.