மீனவர்களுக்கு மத்திய அரசு இன்பசெய்தி! உதயமாகிறது மீன்வளத்துறை



Seperate department for fisheries

பாஜக ஆட்சியின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடராக நடைபெற்று வருகிறது. 

இந்த இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ரஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத் போன்றோர் கலந்துகொண்டனர். உடல்நலக் குறைவால் அமைச்சர் அருண்ஜெட்லி இதில் கலந்துகொள்ளவில்லை.

இது பாஜக அரசின் ஆறாவது மற்றும் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கலாம் என மக்கள் எதிர்ப்பார்த்தனர். 

பட்ஜெட்டில் பியூஸ் கோயல் பேசியது:
- கடந்த 5 வருடத்தில் 239 பில்லியன் டாலரை அந்நிய முதலீடாக இந்தியா பெற்றுள்ளது. 

- 2 ஹெக்டேர் வரையுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த தொகை மூன்று தவணைகளில் நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்படுமாம். இதன்மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறுமாம். 

- மேலும் மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் பியூஸ் கோயல்.