பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அதிர்ச்சி... மருமகள் நடத்தையில் வந்த சந்தேகத்தால் மாமனார் செய்த கொடூரம்.!
கர்நாடக மாநிலம் மைசூரில் மருமகள் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட மாமனார் அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது இது தொடர்பாக 70 வயது முதியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள ஹரோஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கந்தய்யா(70). இவரது மகனுக்கும் கவிதா என்ற பெண்ணிற்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவரின் வருமானம் போதாதால் கவிதா தனியார் கல்லூரியில் உதவியாளராக வேலை செய்து வந்திருக்கிறார்.
மருமகள் வேலைக்குச் செல்வது மாமனார் கந்தய்யா ஏற்கவில்லை இது தொடர்பாக அடிக்கடி வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் வேலைக்குச் செல்லும் மருமகளின் நடத்தையில் சந்தேகப்பட்டு இருக்கிறார் கந்தய்யா. இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது மருமகளை சுத்தியலால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கொலை நடந்த பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் இறந்த கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் கவிதாவின் மாமனாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.