மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக்.. துப்பாக்கி முனையில் பிரபல வங்கியில் கொள்ளை..ரூ.18.85 கோடியை கொள்ளையடித்து வங்கி ஊழியர்களை கழிவறையில் அடைத்து வைத்து சென்ற முகமூடி கொள்ளையர்கள்..!
மணிப்பூரில் உக்ருல் என்ற பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியை ரிசர்வ் வங்கியானது பணம் வைக்கும் மைய பகுதியாக பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ராணுவ வீரர்கள் போல் வேடம் அணிந்து 10ற்க்கும் மேற்பட்ட முகமூடி கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்துள்ளனர்.
பின்னர் அந்த கொள்ளையர்கள் அங்கு பணியில் இருந்த ஊழியர்களை தாக்கி கையிற்றால் அவர்களை கட்டி அங்கிருந்த கழிவறைக்குள் வைத்து அவர்களை பூட்டியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து வங்கி மேலாளரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி லாக்கர் அறையை திறக்க சொல்லி உள்ளனர்.
இதனால் பதறிப்போன வங்கி மேலாளர் லாக்கர் அறையை திறந்து விடவே அதிலிருந்த பணக்கட்டுகளை மூட்டைகளில் கட்டிக் கொண்டு அந்த முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த காட்சிகள் யாவும் அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.