மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராகுல் காந்திக்கு திருமணம் எப்போது,? சோனியா காந்தியின் பதில்.!... சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காகும் வீடியோ.!
இந்தியாவின் வருங்கால தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் ராகுல் காந்தி. இந்தியாவின் அடுத்த பிரதமராக அரசியல் வல்லுனர்களும் மக்களும் இவரை கணித்து வருகின்றனர். சமீபத்திய கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளில் கூட இவரது தாக்கம் இருப்பதாக பல்வேறு ஊடகங்களும் கருத்துக்களை வெளியிட்டன .
இந்நிலையில் சோனியா காந்தி தனது இல்லத்தில் பெண்கள் மற்றும் விவசாயிகளைச் சந்தித்து உரையாடினார். அப்போது சோனியா காந்தியிடம் பெண் விவசாயி ஒருவர் கேட்ட கேள்வி தற்போது இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவை ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சோனியா காந்தியிடம் பேசிய பெண் விவசாயி ஒருவர் உங்களது இரண்டு பிள்ளைகளும் உங்களை எப்படி பார்த்துக் கொள்கிறார்கள் எனக் கேட்டார். அதற்கு சோனியா காந்தி இரண்டு பிள்ளைகளுமே தன் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அந்தப் பெண் ராகுல் காந்திக்கு எப்போது கல்யாணம் என சோனியா காந்தியிடம் கேட்டார்.
अब होगी राहुल गांधी की शादी, मां सोनिया गांधी ने कहा, "लड़की ढूंढो"
— News24 (@news24tvchannel) July 29, 2023
◆ कांग्रेस ने भारत जोड़ो यात्रा से जुड़ा वीडियो ट्वीट किया#SoniaGandhi | #RahulGandhi | @RahulGandhi | @priyankagandhi pic.twitter.com/KsJAVPLVTM
இதனைக் கேட்டு அங்கிருந்த பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அனைவரும் சிரித்தனர். இதற்கு பதில் அளித்த சோனியா காந்தி நீங்களே ஒரு பெண் இருந்தால் பார்த்து கொண்டு வாருங்கள் திருமணம் செய்து வைக்கலாம் என புன்னகையுடன் பதில் அளித்தார், இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.