திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உடம்பெல்லாம் குதறி படுகாயம்.! இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த வாய் பேச முடியாத சிறுவன்!! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரளாவில் வாய் பேச முடியாத 10 வயது சிறுவன் தெருநாய்கள் கடித்து குதறியதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் முழப்பில்லங்காடு என்ற பகுதியை சேர்ந்தவர்கள் நெளஷாத் மற்றும் லூசிபா. இவர்களுக்கு 10 வயதில் நிஹால் என்ற மகன் உள்ளார.
நெளஷாத் பக்ரைனில் பணியாற்றி வரும் நிலையில் நிஹால் தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். வாய் பேச முடியாத சிறுவனான அவன் நேற்று மாலை விளையாட சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதறிப்போன லூசிபா தனது மகனை வழக்கமாக விளையாடும் இடங்களில் தேடியுள்ளார்.
ஆனால் அங்கெல்லாம் அவனைக் காணாத நிலையில் பயந்துபோன அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பல இடங்களிலும் தேடிய நிலையில் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் நிஹால் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். மேலும் அவரது உடல் முழுவதும் நாய்கள் கடித்து குதறி இருந்தது. இதனைக் கண்டு பதறிபோன அவர்கள் உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.