மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"விபச்சாரி, சின்ன வீடு, சோம்பேறி"களுக்கு தடை.! உச்சநீதிமன்றம் அறிவிப்பு.!
பெண்களை இழிவு படுத்தக்கூடிய வகையில் வார்த்தைகளை உபயோகிக்க கூடாது என்று சில வார்த்தைகளுக்கு தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம் அதற்கு மாற்று வார்த்தைகளையும் அறிமுகம் செய்துள்ளது.
பெண்களை 'மயக்கும் சாகச காரி' மற்றும் கற்பிழந்தவர், விபச்சாரி போன்ற பல்வேறு வார்த்தைகளை கொண்டு இழிவுபடுத்தும் விதமாக பலரும் பேசுவதும், வசை பாடுவதும் வழக்கம். இந்த வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தற்போது நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் உறவுக்கு சின்ன வீடு என்று கூறுவதும், தகாத உறவு போன்ற வார்த்தைகளுக்கு பதிலாக திருமணத்தை மீறிய உறவு என்று கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈவ்டிசிங் என்ற வார்த்தைக்கு பதிலாக சாலையில் பாலியல் அத்துமீறல் என்று கூறலாம் எனவும், விபச்சாரி என்ற வார்த்தைக்கு பதில் பாலியல் தொழிலாளி என்று குறிப்பிடலாம் எனவும், சோம்பேறி என்ற வார்த்தையை உபயோகிக்காமல் அதற்கு பதில் வேலை செய்யாமல் இருப்பவர் என்று கூறவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.