மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கெட்-டூ-கெதரில் கருவுற்ற பெண்: ஹைகோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை அலைந்த அவலம்..!
திருமணம் ஆகவில்லை என்பதை காரணம் காட்டி கருக்கலைப்பை மறுக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி, மணிப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் அவருடைய ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து வாழ்தார். இதனால் கருவுற்ற அவர் தனது ஐந்து மாத கருவை கலைக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், கருக்கலைப்பு சட்டத்தின் மூன்றாவது பிரிவில் பார்ட்னர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர கணவர் என்று குறிப்பிடப்படவில்லை, எனவே, திருமணமாகாத பெண்களுக்கும், இந்த சட்டம் பொருந்தும்.
எனவே மனுதாரர் திருமணம் ஆகாததை காரணம் காட்டி கருக்கலைப்பை மறுக்க முடியாது. மனுதாரரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை குழுவின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு கருவை கலைக்க அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்தனர்.