மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வங்கியில் அதற்கு மேல் பணம் எடுத்தால் 2% வரி; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
இரண்டாவது முறை ஆட்சி பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.
பின்னர் 11:30 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை துவங்கினார் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். வியாபாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம், விவசாயத் துறையில் தனியார் நிறுவனங்களின் முதலீடு, புதிய தேசிய கல்விக் கொள்கை, பாரத் நெட் என தனது உரையை ஆரம்பித்தார்.
மேலும் வரி சம்பந்தமாக பேசிய அவர் 5 லட்சம் வருமானத்திற்கு குறைவாக உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய தேவையில்லை என்றார். டிஜிட்டல் முறையை ஊக்குவிக்கும் விதமாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த எந்த கட்டணமும் கிடையாது என்றார்.
அதோடு மட்டுமல்லாமல் பணத்தை ரொக்கமாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த 1 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்தால் 2% டிடிஎஸ் வரி விதிக்கப்படும் என நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.