3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
#ShockingNews: 2 மாதத்தில் 7 பேருக்கு கைக்குழந்தை விற்பனை.. தந்தை உட்பட 11 குற்றவாளிகள் பரபரப்பு கைது.. பேரதிர்ச்சி தகவல்.!
பிறந்த கைக்குழந்தை தந்தையால் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அது அடுத்தடுத்து 7 பேருக்கு கைமாற்றி விற்பனை செய்யப்பட்ட துயரம் நடந்துள்ளது. இறுதியாக குழந்தை காவல் துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டம், மங்களகிரி கண்டலாய்பெட் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக மனோஜின் மனைவிக்கு 3 ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக பிறந்துள்ள பெண் குழந்தையை எப்படி வளர்த்து ஆளாக்கப்போகிறோம் என மனோஜ் எண்ணியுள்ளார்.
இதனையடுத்து, குழந்தையை விற்பனை செய்திடலாம் என்ற எண்ணம் ஏற்படவே, இதனை மனைவிக்கு தெரிவித்துள்ளார். அவரும் முதலில் சம்மதம் தெரிவித்த நிலையில், சில நாட்களில் மனம்மாறி குழந்தையை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையும் மீறி மனோஜ் காயத்ரி என்ற புரோக்கரின் மூலமாக 3 மாத பெண் குழந்தையை ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
காயத்ரியோ குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தையை விற்பனை செய்ய முடிவெடுத்த நிலையில், நல்கொண்டா மாவட்டம் பால்கெட் பகுதியை சேர்ந்த பாக்யா நந்துவிற்கு ரூ.1.20 இலட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இவர் தனது உறவினரின் உதவியுடன் ஐதராபாத்தை சேர்ந்த நூர்ஜஹான் என்ற பெண்மணிக்கு குழந்தையை ரூ.1.87 இலட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, நூர்ஜஹான் மற்றொருவரிடம் குழந்தையை விற்பனை செய்ய, பல்வேறு நபர்களுக்கு குழந்தை அடுத்தடுத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இறுதியாக, குழந்தை ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோதாவரி எள்ளுரு கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் ரூ.2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக மனோஜின் மனைவி காயத்ரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி, மனோஜ் உட்பட சிங்கிலித்தொடர் விற்பனையில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்தனர். குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இந்த கும்பலிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.