மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதியவரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. உதவிக்காக அழைத்து செல்வதுபோல் நடித்து கொடுமை..!
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், செக்கடி தெருவில் வசித்து வருபவர் பட்டமுத்து (வயது 50). இவர் சம்பவத்தன்று, பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணை உதவி தேவை என்று கூறி தனது இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு, பெண்மணியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், இதனை வெளியே கூறினால் கொலை செய்த்துவிடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி உயிர் பயத்தால், மன விரக்தியுடன் இருந்து வந்துள்ளார்.
அவரின் செயல்பாடுகளை கவனித்த உறவினர் ஒருவர் விசாரிக்கையில் உண்மை தெரியவரவே, அவர்கள் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பட்டமுத்துவை கைது செய்தனர்.