ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி... காரை தீவைத்து எரித்த பொதுமக்கள்...!!
மத்திய பிரதேசத்தில் உள்ள பெதுல் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் குல்ஹானே. பாஜக நிர்வாகியாக உள்ள இவர் மாவு ஆலை நடத்தி வருகிறார். இவர் கடந்த எட்டு வருடத்திற் முன் பெதுல் நகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ரமேஷ் வசிக்கும் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி, அந்த பகுதி மக்கள் போராட்டம் செய்தனர். மேலும் அவரது காரை பொதுமக்கள் தீயிட்டு எரித்தனர். இதை தொடர்ந்து ஊரைவிட்டு ரமேஷ் குல்ஹானே தப்பி ஓடினார்.
காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பெதுல் குற்றவியல் கோர்ட்டில் ரமேஷ் குல்ஹானே சரணடைந்தார். கோர்ட் உத்தரவின்படி நீதிமன்ற காவலுக்கு ரமேஷ் அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கூடுதல் எஸ்.பி நீரஜ் சோனி கூறுகையில், கைதான ரமேஷ் குல்ஹானே மீது ஐபிசி 376 மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.