மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரயில் நிலையத்தில் டிரமுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடல்... போலீசார் விசாரணை...!!
கர்நாடகாவில் உள்ள ரயில் நிலையத்தில், 30 வயது பெண்ணின் உடலை பிளாஸ்டிக் டிரம்முக்குள் வைத்து போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
கர்நாடகாவின் பெந்தலூரு மாவட்டத்தில் பைய்யப்பனஹள்ளி நகரில் இருக்கும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தில், 31 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் ஒன்று கிடந்தது. இதனால் அங்கிருந்த பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பெண்ணின் உடலை ஆட்டோவில் வந்த மூன்று பேர் ரயில் நிலையத்திற்குள் கொண்டு வந்து போட்டு விட்டு சென்றுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ரெயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சியில் மூன்று பேர் ஒரு டிரம்மை தூக்கி கொண்டு வந்து ரயில் நிலையத்தில் போட்டு விட்டு போனது தெரிய வந்தது.
கடந்த ஜனவரியில் பெங்களூரு நகரில் யஷ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் ஒன்று இது போல கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு மாதத்தில் அதேபோன்று ஒரு சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.