#JUSTIN: 60 அடி ஆழ்துளைக்கிணறில் விழுந்து உயிருக்கு போராடும் சிறுவன்.. மீட்பு பணியில் தீவிரம்..! பெற்றோர்களே உஷார்..!!



The boy fell into the borehole and was in danger

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள விதிஷா பகுதியைச் சேர்ந்த சிறுவன் லோகேஷ் நேற்றிரவு 43 அடி ஆழமுள்ள ஆழ்துளைக்கிணறில் விழுந்துள்ளான். சிறுவன் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவனைத் தேடுகையில், அவர் அங்குள்ள ஆழ்துளைக்கிணரில் சிக்கியது தெரியவந்துள்ளது. 

மேலும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் ஆழ்துளைகிணறுக்கு அருகே பள்ளம் தோண்டி சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைகிணறில் சிறுவன் 43வது அடியில் மாட்டியுள்ளான்.

இந்தியா

தேசிய மீட்பு பணி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், துரிதமான மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவகுழுவினரும் சிறுவனின் உடல்நலம் தொடர்பாக கண்காணித்து வருகின்றனர்.

பெற்றோகளின் கவனத்திற்கு : உங்கள் பகுதியில் அல்லது உங்கள் வீட்டருகே உபயோகம் செய்யாத ஆழ்துளைக்கிணறு இருந்தால் அதனை பாதுகாப்பாக மூடுவது அல்லது மண் கொட்டி அழிப்பதே சிறந்தது. ஏனெனில் குழந்தைகளுக்கு அதன் ஆழமும், ஆபத்தும் தெரியாது. கவனமாக செயல்படுங்கள்.