திருப்பதி அலிபிரி பாதையில் படையெடுக்கும் பாம்புகள்.. எச்சரிக்கை விடுத்த தேவஸ்தானம்.. மக்களே கவனம்..!



Tripathi TTD Warning to Devotes about Alibiri Footpath Snake

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிபிரி கூர்க்கா கொட்டகை பகுதியில், 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு மக்கள் பாதயாத்திரை செல்லும் பகுதியில் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் பதறியபடி ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த தேவஸ்தான ஊழியர்கள், பாம்பை லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர். 

இதனைப்போல, திருப்பதியில் இருக்கும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவமனையிலும் நல்லபாம்பு வருகை தரவே, பதறிப்போன மக்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வனத்துறையினர் உதவியுடன் பாம்பை பிடித்து வனத்திற்குள் விட்டனர். 

இந்த நிலையில், நேற்று மீண்டும் அலிபிரி பாதையில் மீண்டும் 10 அடி நீளமுள்ள நல்லபாம்பு படமெடுக்கவே, பதறிப்போன மக்கள் மீண்டும் திகைத்துள்ளனர். இதனால் கோடைகாலம் என்பதால் பாம்புகள் நடைபாதைக்கு வருகிறது. பக்தர்கள் கவனமாக செல்ல வேண்டும். காட்டிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.