ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அடப்பாவமே!! தீராத கடன் தொல்லை.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை..!
திருவனந்தபுரம் அருகே கடினம்குளம் பகுதியில் வசித்து வருபவர்கள் ரமேசன் - சுலஜா குமாரி தம்பதியினர். இவர்களுக்கு ரேஷ்மா என்ற ஒரு மகள் உள்ளார். ரமேசன் துபாயில் பணிபுரிந்து விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். மேலும் அவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரமேசன், சுலஜா மற்றும் ரேஷ்மா ஆகிய 3 பேரும் வழக்கம்போல் வீட்டில் படுத்து உறங்கியுள்ளனர். இதனை அடுத்து ரமேசன் வீட்டில் இருந்து திடீரென்று அலரல் சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அவர்கள் 3 பேரும் தீயில் கருகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.