திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்தியாவிற்கு வருகைதந்த அமெரிக்க அதிபருக்கு,முதல்வர் கொடுத்த அசத்தலான நினைவு பரிசு! பிரமித்துப் போன டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருநாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.அவருடன் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவானா ட்ரம்ப், ஜெரெட் குஷ்னர் மற்றும் சில குழுவினர் வந்துள்ளனர். இந்நிலையில் முதல் நாளான நேற்று அவர்கள் அனைவரும் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டனர். பின்னர் இந்திய பிரதமர் மோடியுடன் சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப்என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அதனை தொடர்ந்து டிரம்ப் தனது குடும்பத்தினருடன் சென்று தாஜ்மஹாலை பார்த்தார். மேலும் தாஜ்மஹாலை கண்டு பிரமித்துப் போன அவர் அங்கு பல பகுதிகளில் நின்று தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் அங்குள்ள விசிட்டர்ஸ் புத்தகத்தில் தாஜ்மஹால் பிரம்மிப்பை தூண்டுகிறது. இந்திய கலாச்சாரத்தின் அழகு என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவிற்கு வருகை தந்த டிரம்ப்பிற்கு நினைவு பரிசாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தாஜ்மஹாலில் அமெரிக்க அதிபர் அவரது மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பெரிதாக ப்ரேம் போட்டு பரிசாக கொடுத்துள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Chief Minister @myogiadityanath presents photo of Taj Mahal to US President @realDonaldTrump as a memento.@CMOfficeUP @narendramodi @USAndIndia @IndianEmbassyUS @POTUS #TrumpIndiaVisit #NamasteyTrump #TrumpVisitIndia #IndiaWelcomesTrump #IvankaTrump pic.twitter.com/rVhwWVmPes
— DD India (@DDIndialive) February 24, 2020