மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இராணுவ கணவர் கொடுத்த தைரியம் : 7 வயதில் 2 மாமாவால் சூறையாடப்பட்ட சிறுமி.. 35 வயதில் பரபரப்பு புகார்.!
சிறுவயதில் பாலியல் பலாத்காரத்தை சந்தித்த சிறுமி, தனது கணவர் கொடுத்த ஊக்கத்தினால் 35 வயதில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் வசித்து வரும் 35 வயது பெண்மணி, ஆக்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், "எனது சித்தியின் குடும்ப ஆணால் நான் 7 வயதில் இருந்து பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினேன். எனது வளர்ப்பு மாமா முதலில் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நடனத்தை சித்தியிடம் கூறி வயிறு வலிக்கிறது என்று கூறிய நிலையில், அவர் எனக்கு மருந்து கொடுத்து விஷயத்தை வெளியே கூறக்கூடாது என கண்டித்தார்.
இந்த விஷயத்தை அறிந்த எனது இரண்டாவது மாமா, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அவர்களை தடுக்க முயற்சித்தும் பலனில்லாது ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவினேன். ஒருகட்டத்தில் என்னை அவர்களால் நெருங்க இயலவில்லை வென்றாலும், பாலியல் சீண்டல்கள் செய்தனர். பின்னர், கடந்த 2011 ல் எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் தாயை சந்திக்க சென்றாலும் கயவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார்கள்.
என்னால் இயன்றவரை அவர்களிடம் இருந்து தப்பித்து வந்துகொண்டு இருக்கிறேன். முதலில் அவர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க தைரியம் இல்லை. எனது கணவர் இராணுவத்தில் பணியாற்றுகிறார். அவர் கொடுத்த ஊக்கத்தினால் புகார் அளிக்கிறேன். அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.