மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
25 வயது இளம் பணிப்பெண், ஐவர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்: பதறிப்போன குடியிருப்பு வாசிகள்.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா, பாசய் பகுதியில் செயல்பட்டு வரும் குடியிருப்பில், 5 இளைஞர்கள் தங்கி இருக்கின்றனர். இவர்களின் வீட்டில் 25 வயதுடைய இளம்பெண் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணம் முடிந்து கணவர், குழந்தைகள் இருக்கின்றனர். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு 11 மணியளவில், பெண் வேலை பார்த்துவரும் வீட்டில் இருக்கும் 5 இளைஞர்கள், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து வந்த கும்பல், மதுபானம் அருந்தச்சொல்லி கொடுமை செய்துள்ளது. மேலும், தலையில் பாட்டிலை அடித்து உடைத்துள்ளது. பின் பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி மதுவை கொடுத்த ஐவர் கும்பல், பெண்மணியை சீரழித்து இருக்கிறது.
அவர்களின் பிடியில் இருந்து எப்படியோ தப்பி, நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் வாசலில் வைத்து தன்னைக்காப்பாற்ற கூறி அலறியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும், பெண்மணி வீட்டிற்கு செல்ல மறுக்க, அவரை வலுக்கட்டாயப்படுத்தி வீட்ற்குள் தூக்கிசெல்ல முயற்சித்தனர். காவல் துறையினர் விரைந்து வந்ததைத்தொடர்ந்து, பெண்மணி தனக்கு நடந்த கொடுமையை அதிகாரிகளிடம் கண்ணீருடன் விவரித்துள்ளார்.
தனக்கு சிறிய குழந்தைகள் இருப்பதால், வீட்டிற்கு செல்லவேண்டும் என வேண்டுகோள் வைத்தும் பலனில்லை. தற்போது குற்றவாளிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு வலைவீசப்பட்டுள்ளது. பெண்மணி குடியிருப்புவாசிகள் & அதிகாரிகளிடம் கண்ணீருடன் பேசிய வீடியோவும், கயவர்கள் பெண்ணை தூக்கிச்செல்லும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
In #UttarPradesh's #Agra, a woman employee at a homestay alleged she was forced into prostitution and was asked to have sex with multiple men on Nov 11. When she refused, she was attacked with beer bottle.
— Hate Detector 🔍 (@HateDetectors) November 13, 2023
A case of rape, assualt and attempt to murder was registered at #Tajganj… pic.twitter.com/RvGheHjfDg