மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான 3 ஆவது நாளில் புதுமணப்பெண் மரணம்.. குளியலறையில் நடந்த கொடூரம்.!
வாட்டர் ஹீட்டரில் இருந்து வெளியென கார்பன் மோனாக்ஸைடு வாயுவை சுவாசித்த புதுமண பெண் பலியான சோகம் நடந்துள்ளளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரோசாபாத் நகரில் வசித்து வந்த தனியார் வங்கி பெண் ஊழியர் நிதி குப்தா (வயது 27). இவருக்கு கடந்த 3 ஆம் தேதி அங்கு வளையல் மொத்த விற்பனை செய்து வரும் தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
திருமணத்திற்கு பின்னர் கணவரின் இல்லத்தில் வசித்து வந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி குளிக்க சென்ற நிதி குப்தா குளியலறையில் இருந்து வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த கணவர் குளியலறை கதவை உடைத்து உள்ளே செல்கையில், மயங்கிய நிலையில் நிதி குப்தா மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.
விசாரணையில், நிதி குப்தாவின் கணவரின் வீட்டில் உள்ள குளியலறை 3 அடி க்கு 4 அடி என்ற அளவில் குறுகிய நிலையில் இருந்துள்ளது. மேலும், அங்கு காற்றோட்ட வசதிகள் ஏதும் பெரிதாக இல்லை. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் பெண்மணி கார்பன் மோனாக்சைடு வாயுவால் தாக்கப்பட்டு உயிரிழந்தது உறுதியானது.
இதனால் குளியறையில் வெண்டிலேட்டர் (காற்றோட்டம்) வசதி இல்லாததால், வாட்டர் ஹீட்டரில் இருந்து கார்பன் மோனாக்சைடு வெளியாகி, அதனை சுவாசித்த பெண் மயங்கி உயிரிழந்தது அம்பலமானது. திருமணம் முடிந்த 3 நாட்களில் பெண் உயிரிழந்த நிலையில், 3 நாட்கள் கழித்து பெண்ணின் மரணத்தில் உள்ள மர்மத்தை பிரேத பரிசோதனை அறிக்கை அம்பலமாக்கியுள்ளது.