பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
காற்றோட்டத்திற்காக வெளியே படுத்து உறங்கிய மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகன்.. அதிரவைக்கும் சம்பவம்.!
இரவில் காற்றோட்டமாக வெளியில் படுத்து தூங்கிய மூதாட்டியை, மதுபோதையில் வந்த இளைஞர் தூக்கி சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 75 வயதுடைய மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் வீட்டில் மிகவும் வெக்கையாக இருந்ததால் காற்றோட்டமாக வெளியில் படுத்து தூங்கிய நிலையில், அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் மதுபோதையில் வந்துள்ளார்.
அப்போது மது போதையில் மதியிழந்த இளைஞர் திடீரென தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை தூக்கிக்கொண்டு வயல்வெளிக்கு சென்றுள்ளார். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் மூதாட்டியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து மிகவும் கவலைக்கிடமாக கிடந்த மூதாட்டியை அடுத்த நாள் வயல்வெளியில் நிர்வாண நிலையில் அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து உடனடியாக மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பின் இது குறித்து காவல்துறையினரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில், புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் மூதாட்டியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களே பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
அத்துடன் காவல்துறையினர் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், 'தான் குடிபோதையில் இருந்ததால் தெரியாமல் பாலியல் பலாத்காரம் செய்து விட்டேன்' என தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவனது ரத்தக்கரை படிந்த ஆடைகளை ஆதாரமாகக் கொண்டு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.