"கிரிஷ் என்னை காப்பாற்றுவார்" - மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்த 3ம் வகுப்பு மாணவன்; சக்திமான் பாணியில் மீண்டும் துயரம்.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.!



Uttar Pradesh Kanpur 3rd Class Child Fall Down from First Floor Name of Krish Saves me 

 

திரைப்படங்கள் வெறும் கற்பனை, அவை கற்பனை கதாபாத்திரங்கள் என்ற புரிதலை பெற்றோர்கள் சிறுவயதில் இருந்து குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டியதன் விளைவை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், கிடவாய் நகரில் வீரேந்திர ஸ்வரூப் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 3ம் வகுப்பு பயின்று வரும் மாணவர், சம்பவத்தன்று தனது கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சிறுவனின் முகம், கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவன் முதல் மாடியில் இருந்து குதிக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. 

Kanpur

காவல் துறையினர் சம்பவம் குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிறுவன் கிரிஷ் படத்தை பார்த்து உற்சாகமடைந்த, தன்னை கிரிஷ் வந்து காப்பாற்றுவார் என கீழே குதித்தது தெரியவந்தது. 

முன்னதாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சக்திமான் தொடரை பார்த்து குழந்தைகள் பல கட்டிடத்தின் மேல் இருந்து குதித்து உயிரிழந்த சர்ச்சை சம்பவம் நடந்தது. 

இதனிடையே, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப வெளியான கிரிஷ் திரைப்படத்தை பார்த்த சிறுவன், கிரிஷ் தன்னை காப்பாற்றுவார் என எண்ணி கீழே குதித்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

அந்த படத்திலேயே சாகசத்தை தான் மட்டுமே செய்வேன் என நாயகன் குழந்தையிடம் கூறினாலும், குழந்தையின் மனது குழந்தையின் மனத்தான் என்பதை உணர வேண்டும்.