பூனைக்காக உயிரையே கொடுத்த பெண்மணி.! 3 நாட்கள் பிணத்துடன் இருந்த சம்பவம்.!



uttar pradesh women suicide for her cat

வளர்ப்பு பூனைக்காக ஒரு பெண் தன் உயிரையே கொடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பூஜா என்ற 36 வயது பெண்மணி செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த பூனையை அவர் மிகவும் அன்பாக தனது பெற்ற குழந்தையைப் போல கவனித்து வந்துள்ளார். மேலும், பூஜாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. 

Uttar pradesh

சமீபத்தில் பூஜா அவ்வளவு அன்பாக வளர்த்த பூனை உயிரிழந்து இருக்கிறது. பூனை இறந்த பின்பு கூட அதை அப்புறப்படுத்தாமல் அதன் பிணத்துடன் 3 நாட்கள் பூஜா வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பூஜா திடீரென தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: காதலியை கொன்று, மொட்டை போட்ட காதலனின் விசித்திரமான செயல்.! கங்கையில் நீராடிய அதிர்ச்சி.!

இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து சென்று பூனையை அப்புறப்படுத்தி பூஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ப்பு பூனையின் பிரிவு தாங்காமல் ஒரு பெண் தன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: அந்த காரணத்துக்காக மனைவியை துணியை அவிழ்த்து.. கணவனின் கொடூர செயல்.!