மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வரதட்சணை கொடுக்காத மனைவியின் மூக்கை கடித்த பயங்கரம்; கணவன் வெறிச்செயல்.!!
உத்திரபிரதேசம் மாநிலம் ரேபரேலி, மகேஷ்பூர் பகுதியைச் சார்ந்தவர் நஜீம். இவரது மனைவி அஜ்மி (வயது 22). தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், நஜீமின் குடும்பத்தினர் அஜ்மியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் மாமனார் சபீர் குடும்ப உறுப்பினர்களான ரிகான், ரக்ஷர், சையத் அகமத், மாகித் உசைன் ஆகியோர் பெண்ணை கடுமையாக தாக்கி துன்புறுத்தியும் இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் கணவர் தனது மனைவியின் மூக்கை கடித்திருக்கிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி தனது 5 மாத கைக்குழந்தையுடன் மருத்துவமனையில் சென்று சிகிச்சைக்கு அனுமதியாகி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.