96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மனநலம் பாதிக்கப்பட்ட தாயின் விபரீத செயல்: குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டம், பாதேவ்ரா கிராமத்தை சேர்ந்த பெண்மணி கேட்கி (வயது 33). இவரின் மனைவி ஜெக்மோகன். தம்பதிகளுக்கு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று தனது குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொடுத்த நிலையில், தானும் அதனை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக பெண்மணி மற்றும் அவரின் குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
அங்கு பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரின் குழந்தைகள் மெஹக் (வயது 9), ஆர்யன் (வயது 7), மான்வி (வயது 3) குழந்தைகள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கேட்கி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.