மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏலத்தில் விடப்பட்ட விஜய் மல்லையாவின் ஹெலிகாப்டர்கள்!. தொகை எவ்வளவு தெரியுமா?
பலவங்கிகளில் 9000 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கிய விஜய்மல்லையா கடனை திரும்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். பின்னர் இவர் அயல்நாடுகளில் உல்லாசமாக திரிவதாக புகைப்படங்கள் வெளியாகின.
இதையடுத்து அவருக்கு சொந்தமான சொத்துக்கள் பல ஏலத்தில் விடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விஜய்மல்லையாவின் ஹெலிகாப்டர்கள் தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
மும்பை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த, 5 இருக்கைகள் கொண்ட, ஏர்பஸ் ஈரோகாப்டர் பி155 ரக ஹெலிகாப்டர்களை டெல்லியை சேர்ந்த சவுத்ரி ஏவியேசன் என்ற நிறுவனம் ஏலத்தில் வாங்கியுள்ளது.
ஒவ்வொரு ஹெலிகாப்டரும் தலா 4 கோடியே 37 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. தொழிலதிபர் விஜய் மல்லையா தனிப் பயன்பாட்டுக்கு வைத்திருந்த 2 ஹெலிகாப்டர்கள் 8 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளன.
வாராக்கடன் விவகாரத்தில் மல்லையாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடன் மீட்பு தீர்ப்பாயம் இந்த ஏலத்தை நடத்தியுள்ளது.