டிசம்பரில் நாடாளுமன்ற தேர்தல்..?!! மம்தா பானர்ஜி பகீர் தகவல்..!!
பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த பா.ஜனதா கட்சி திட்டமிட்டிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இந்திய பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு 2024 மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தேர்தலை 4 மாதங்களுக்கு முன்னதாக வரும் டிசம்பரில் நடத்த மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி திட்டமிட்டிருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது :- பா.ஜனதா கட்சியினர் நமது நாட்டில் சமூகங்களுக்கு இடையேயான பகைமையை உருவாக்கியுள்ளனர். அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமூகங்களுக்கு இடையிலான வெறுப்பை உருவாக்கிவிடும்.
பாராளு ளுமன்ற தேர்தலை பா.ஜனதா கட்சியினர் டிசம்பர் மாதத்திலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயோ நடத்தக்கூடும் என்று நினைக்கிறேன். தேர்தல் பிரசாரத்துக்காக அக்கட்சியினர் அனைத்து ஹெலிகாப்டர்களையும் வாடகைக்கு முன்பதிவு செய்து விட்டனர். இதன் காரணமாக மற்ற கட்சிகள் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.